New Updates! Fresh news just arrived.

காகிதமற்ற சுங்க ஆவண முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்த...

News

காகிதமற்ற சுங்க ஆவண முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கம்!

September 12, 2026 8:27 am
காகிதமற்ற சுங்க ஆவண முறைமை குறித்து சர்வதேச நாணய நிதியத்திற்கு விளக்கம்!
ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது புதிய முறைமையின் செயல்பாடு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் தொழில்நுட்பத் தயார்நிலை குறித்து IMF பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

திட்டத்தை முன்னெடுப்பதற்கான இலங்கை சுங்கம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பங்களிப்புகளை பாராட்டிய IMF பிரதிநிதிகள், தேவையான ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now