New Updates! Fresh news just arrived.

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு: நால்வர் படுகாயம்! - ...

News

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு: நால்வர் படுகாயம்!

June 27, 2026 6:16 pm
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு: நால்வர் படுகாயம்!
மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரமாக அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில் வெள்ளிக்கிழமை (26) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் சிக்கி கொண்டதுடன் சிறு வெடிப்பு காரணமாக அவ்விடத்தில் 4 பேரும் காயமடைந்தனர்.

தற்போது படுகாயமடைந்த நால்வரும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now