வெளிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு
News
வெளிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையால், இலங்கையில் இருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களினுடைய விசா காலத்தினை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களினுடைய விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என, அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலின் காரணமாக, அந்த வான்பரப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து விமானப் பயணங்களினையும் நேற்று (28) நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேற முடியாமல் போகும் பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களினை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும், மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் குறித்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் வரைக்கும், அவர்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி நாட்டில் தங்கியிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.