New Updates! Fresh news just arrived.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி!

News

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி!

March 10, 2026 9:11 am
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி!
இன்று (10) அதிகாலை வர்த்தகத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தன.

பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலையானது சுமார் 8.5% சரிந்து ஒரு பீப்பாய் $92.50 (£68.85) ஆகக் காணப்பட்டது.

அமெரிக்காவிலும் கச்சா எண்ணெய் விலையானது சுமார் 9% சரிந்து ஒரு பீப்பாய் $88.60 ஆகக் குறைந்தது.

இருப்பினும், மோதல் தொடங்கிய காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இவ்விலைகள் இன்னும் சுமார் 30% அதிகமாகவே உள்ளன.

போர் "மிக விரைவில்" முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களினைத் தொடர்ந்தே இந்த விலை வீழ்ச்சியானது ஏற்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததின் காரணமாக ஆசிய சந்தைகள் ஊக்கமடைந்துள்ளதாகத் தெரிகின்றது.

ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225) குறியீடு 2.8% உயர்ந்ததோடு, தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) பங்குச்சந்தை 5%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் வளைகுடா நாடுகளினுடைய முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பதினால், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் ஆசிய சந்தைக் குறியீடுகள் பெரும் பின்னடைவினைச் சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now