4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கை...
News
4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது!
சுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களினை சூட்சுமமாக கடத்திய சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பிலிருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் குறித்த கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, குறித்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைவாக வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு–கல்முனை அதி சொகுசு பேரூந்து சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அக்கரைப்பற்று பகுதியினை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான குடும்பஸ்தர் பயணப் பை ஒன்றில் சூட்சுமமான் முறையில் கொண்டு வந்திருந்த 4 கோடி ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களோடு கைதானார்.
குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில் குஷ், கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் ,ஹெரோயின், உட்பட 4 வகையான போதைப்பொருட்களும், 2 தொலைபேசிகள் ஒரு தொகை பணம் மா டின் என்பனவும் நீலாவணை பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியான ஏ.ஏ.ஜயரட்ண உட்பட பொலிஸ் சார்ஜெண்டுகளான ஏ.எல்.எம் தௌபீக் மற்றும் திலகரட்ண ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபரினை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்த நிலையில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரான எம்.கே.இப்னு அஸார் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டிருந்த மேலதிக விசாரணையின் போது சுமார் 20 தொடக்கம் 30 வரையிலான 6 போதைப்பொருள் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக சம்மாந்துறை உட்பட ஏனைய பொலிஸ் நிலையத்தின் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் கைதான 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரினை இன்று (30) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்துவதற்கு பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த கைது நடவடிக்கையினால் போதைப்பொருள் வலையமைப்பு பிடிக்கப்பட்டு பல்வேறு வகையிலான போதைப்பொருட்களும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்