பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல்!...
News
பிரபல போதைப்பொருள் வியாபாரிக்கு 5 நாட்கள் தடுப்புக்காவல்!
அதிகளவான போதைப்பொருட்களினை இளைஞர்கள் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியினை எதிர்வரும் ஜனவரி 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(2) மாலை இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார்கள் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலில் சாய்ந்தமருது பகுதியினை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி 30 கிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளோடு கைதானார்.
குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் சாய்ந்தமருது பொதுச்சந்யின் மாடியில் கைது செய்யப்பட்டவராவார்.
குறித்த சந்தேக நபர் அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகளவான போதைப்பொருட்களினை மருதமுனை பகுதியில் விநியோகித்து வந்த நிலையில் இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து கைதானமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதான 44 வயதுடைய சந்தேக நபரை சனிக்கிழமை(3) கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதினை தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்தோடு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபரினை D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்டத்தின் குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளினை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளோடு, தொடர்புடையவர்களினை கண்டறிவதற்காக போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைவாக பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரன் வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கைகளானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்