New Updates! Fresh news just arrived.

இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் - சுகாதார அமைச...

News

இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் - சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

May 27, 2026 10:14 am
இலங்கையில் வேகமாகப் பரவும் மூளைக்காய்ச்சல் - சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 203 பேர் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நோய்த்தொற்றுகள் தெனியாய, தியத்தலாவ, ரிபில்லகஸ்கட மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நோய் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now