New Updates! Fresh news just arrived.

மாத்தளையில் தந்தை கொலை – 16 வயது மகன் கைது!

News

மாத்தளையில் தந்தை கொலை – 16 வயது மகன் கைது!

September 6, 2026 10:37 am
மாத்தளையில் தந்தை கொலை – 16 வயது மகன் கைது!
மாத்தளை உக்குவளை பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றைத் தொடர்ந்து 40 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதன் பின்னரே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் 16 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now