New Updates! Fresh news just arrived.

ரணிலின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுக்கு சிஐடியிடமிருந்து அ...

News

ரணிலின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுக்கு சிஐடியிடமிருந்து அழைப்பு

February 18, 2026 3:43 pm
ரணிலின் மனைவி மைத்ரி விக்ரமசிங்கவுக்கு சிஐடியிடமிருந்து அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம் 20ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக நிதி அனுமதி வழங்கியதன் மூலம், அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now