New Updates! Fresh news just arrived.

ராமர் பால மணல் திட்டுகளுக்கு 15ஆம் திகதி முதல் படகு சேவை!...

News

ராமர் பால மணல் திட்டுகளுக்கு 15ஆம் திகதி முதல் படகு சேவை!

October 2, 2026 8:05 am
ராமர் பால மணல் திட்டுகளுக்கு 15ஆம் திகதி முதல் படகு சேவை!
மன்னார் தலைமன்னார் பகுதியில் உள்ள ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளை பார்வையிடுவதற்கான விசேட சுற்றுலா படகு சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வெள்ளோட்டத்தைத் தொடர்ந்து, படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (01) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஒரு படகில் அதிகபட்சம் 7 சுற்றுலாப் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு ரூ.2,500 கட்டணம் அறவிடப்படவுள்ளது. இதன்படி, 7 பேருக்கான படகுக் கட்டணம் ரூ.17,500 ஆகும்.

மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பயணி ஒருவரிடமிருந்து ரூ.140 கட்டணமும் அறவிடப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் கீழ் இலங்கைக்குச் சொந்தமான 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now