உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்...
News
உயிருக்குப் போராடும் யானை: தொடரும் அவசர மருத்துவச் சிகிச்சைகள்!
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை(21) உயிருக்குப் போராடி வருகின்ற 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகளானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினுடைய வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தினுடைய பொறுப்பதிகாரியானது எம்.ஜி. அஜித் குணரத்ன விடுத்த அவசரக் கோரிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறை பிரதேச சபையினுடைய தவிசாளரான ஐ.எல்.எம். மாஹிர் குறித்த யானைக்கான சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையாக இருந்த முழுமையான ஒத்துழைப்புகளினை வழங்கியுள்ளார்.
இதன்படி,பாதிக்கப்பட்டுள்ள யானைக்குத் தங்கு தடையின்றி அவசரச் சிகிச்சைகளினை அளிப்பதற்குத் தேவையான கூடார வசதிகள் மற்றும் யானையை மீட்கும் பணிகளுக்கான கனரக வாகன வசதிகளினை சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கின்ற குறித்த யானையின் உயிரைப் பாதுகாத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வனவிலங்கு மருத்துவக் குழுவானது வியாழக்கிழமை(22) தொடக்கம் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று தீவிர சிகிச்சைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்