New Updates! Fresh news just arrived.

நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு 2026 : பொதுமக்களுக்கா...

News

நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு 2026 : பொதுமக்களுக்கான அறிவித்தல்!

March 16, 2026 3:18 pm
நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு 2026 : பொதுமக்களுக்கான அறிவித்தல்!
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கட்டம் II இனை உருவாக்கும் நோக்கில் நிதியியல் வசதிக்குட்படுத்தல் தொடர்பான தரவுகளையும் தகவல்களையும் சேகரிப்பதற்காக நாடளாவிய ரீதியிலான அளவீடொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி 480 கிராம சேவகர் பிரிவுகள் முழுவதும் இவ்வளவீடு நடத்தப்படும். நிதியியல் சேவைகள், பயன்பாட்டு முறைகள் மற்றும் நிதியியல் உற்பத்திகளை அணுகுவதிலுள்ள தடைகள் பற்றிய பெறுமதியான நுண்நோக்குகளை இவ்வளவீடு சேகரிக்கவுள்ளது.

இலங்கையின் முன்னணி ஆய்வு நிறுவனமான கென்டர் லங்கா (பிறைவேற்) லிமிட்டெட் நிறுவனத்தினால் இவ்வளவீடு மேற்கொள்ளப்படும்.

இவ்வளவீட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்காக அளவீட்டுக் குழுவினர்களுக்கு உதவுவுதற்கு தங்களின் பெறுமதியான நேரத்தையும் ஆதரவையும் வழங்குமாறு பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி தயவுடன் கோருகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now