New Updates! Fresh news just arrived.

போலி அதிகாரிகள் பெயரில் நிதி மோசடி - பொதுமக்களுக்கு பொலிஸ...

News

போலி அதிகாரிகள் பெயரில் நிதி மோசடி - பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!

June 13, 2026 11:29 am
போலி அதிகாரிகள் பெயரில் நிதி மோசடி - பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
அரச அதிகாரிகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் விசேட விசாரணைப் பிரிவுகளின் அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, தொலைபேசி, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் ஊடாக மோசடிக்காரர்கள் பொதுமக்களை தொடர்புகொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை அல்லது வங்கி கணக்குகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தி, OTP, வங்கி தகவல்கள் மற்றும் பணத்தை பெற முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, தொலைபேசி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனிப்பட்ட வங்கி தகவல்கள், OTP குறியீடுகள் அல்லது பணம் கோரப்பட்டால் அவற்றை நம்ப வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும், அறிமுகமில்லாத இணைப்புகள், QR குறியீடுகள் மற்றும் செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிதி மோசடிகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக காவல்துறையிடம் அல்லது கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அறிவிக்குமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now