நிதி மோசடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அத...
News
நிதி மோசடி: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி கைது!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில், அதன் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர்கே. ஹேரத் என்பவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது.
இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால்வால் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளினை தொடர்ந்து குறித்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கான 'பயனர் மேலாண்மை தொகுதி' எனப்படும் மென்பொருளினை நிறுவுவதற்கு 9,831,250 ரூபாவினை செலுத்திய போதிலும், குறித்த மென்பொருளினை நிறுவதற்கு தவறியமை மற்றும் மென்பொருளினைப் பெற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்தின் பணத்தினை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டமை போன்றகுற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதோடு,மேலதிக விசாரணைகளினை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.