முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரி...
News
முதியோர் பராமரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக மூவர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அந்த மையத்தில் இருந்த சுமார் 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அங்குருவாதொட, படகொட பகுதியில் அமைந்திருக்கும்'மவ்பிய செவன செநெஹஸே கெடெல்ல' என்னும் முதியோர் பராமரிப்பு நிலையமானது நேற்று (03) பிற்பகல் இந்தத் திடீர் தீ விபத்துக்குள்ளானது.
தீயணைப்புப் படையினரும், பிரதேசவாசிகளும் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், இந்த தீ விபத்தினால் குறித்த மையத்திற்குப் பலத்த சேதமானது ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த குறித்த மையத்தில், மனநலக் குறைபாடுடைய நபர்களும் தங்கியிருந்ததாகவும் குறித்த தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த இல்லத்திற்குள் சுமார் 72 பேர் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து காரணமாக இல்லத்திலிருந்த சிலர் தீயில் கருகி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகளானது இன்று (04) காலை நடத்தப்பட்ட பின்னர், சடலங்களினை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரைக்கும் கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பிலான விசாரணைகளினை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.