இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் தீ விபத்து – 15 பச்சிளம் குழந...
News
இஸ்லாமாபாத் வைத்தியசாலையில் தீ விபத்து – 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையொன்றின் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 புதிதாகப் பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
‘பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஒப் மெடிக்கல் சயின்சஸ்’ (PIMS) வைத்தியசாலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், வைத்தியசாலையின் குளிரூட்டல் (AC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே தீ பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்றபோது மகப்பேறு பிரிவில் மொத்தம் 16 பச்சிளம் குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு குழந்தை மாத்திரம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தால் ஏற்பட்ட புகையை அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.