களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்
News
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்
களுத்துறை மாவட்டச் செயலகத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள மின்சாரக் கட்டமைப்பொன்றில் இன்று (13) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காலை 8.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயினால் குறித்த கட்டமைப்பிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தின் பின்னர் களுத்துறை மாவட்டச் செயலகத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.