New Updates! Fresh news just arrived.

மன்னார் குருசு நகர் திண்மகழிவு இறுதி கழிவகற்றல் பகுதியில்...

News

மன்னார் குருசு நகர் திண்மகழிவு இறுதி கழிவகற்றல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து!

August 23, 2026 4:41 pm
மன்னார் குருசு நகர் திண்மகழிவு இறுதி கழிவகற்றல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து!
மன்னார் நகர சபைக்கு சொந்தமான சின்னக்கடை கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள குப்பை சேகரிப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து பாரிய அளவில் பரவியிருந்த நிலையில், தற்போது சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட புகைமூட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரி வினர், மன்னார் நகர சபையின் தீயணைப்புப் படைப்பிரிவினர் மற்றும் இலங்கை இராணுவத்தின் 54, 4VIR சவுத்பார், 10th VIR செல்வரி படைப்பிரிவினர் ஈடுபட்டனர். மேலும், இலங்கை கடற்படையின் பவுசர் மூலம் தண்ணீர் வசதியும் வழங்கப்பட்டது.

அதேவேளை, மேலதிக தேவைக்காக வவுனியா மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு படையின் உதவியும் பெறப்பட்டது.

தற்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், பிரதேச செயலகம், மன்னார் நகர சபை தவிசாளர் மற்றும் அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினரும் சம்பவ இடத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுருகின்றனர்.

அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியான காலநிலை நிலவும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தீ தொடர்பான விடயங்களில் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பாக, குப்பைகள் மற்றும் உலர்ந்த பகுதிகளில் தீ வைத்தல், இலகுவில் தீ பற்ற கூடிய பொருட்களை போதிய பாதுகாப்பின்றி கையால் போன்ற செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்து, தீ விபத்துகளைத் தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றனர்.

மக்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now