தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
News
தேயிலைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
நுவரெலியா, ராகலா புரூக்ஸைடில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று (01) பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட குறித்த தீ விபத்தால், தொழிற்சாலைக்கும் அதன் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ராகலா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராகலா பொலிஸ், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் ஏற்கனவே பரவியிருந்த தீயின் காரணமாக தொழிற்சாலை முற்றிலுமாக அழிந்து போனது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் சேதத்தின் அளவும் இன்னும் மதிப்பிடப்படவில்லை.
குறித்த விபத்துதொடர்பிலான விசாரணை நடத்தி வரும் ராகலா பொலிஸ், சம்பவம் நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் 6 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்தத் தீ விபத்து குறித்து ராகலா பொலிஸ் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றது.