2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஹஜ் முதல் யாத்திரைக் குழு பயணம்...
News
2026 ஆம் ஆண்டுக்கான முதல் ஹஜ் முதல் யாத்திரைக் குழு பயணம்!
2026 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையைத் தொடங்கும் விதமாக, 325 யாத்ரீகர்களைக் கொண்ட முதல் யாத்திரைக் குழு, சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு இன்று இரவு (01) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதர் காலித் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் இலங்கை ஹஜ் குழுவின் உயர் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.
இந்த முதல் யாத்திரைக்காக சவூதி ஏர்லைன்ஸ் ஒரு சிறப்பு விமானத்தை இயக்கியிருந்தது. SV-839 என்ற அந்த விமானம், இன்று இரவு (01) 09.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்குப் புறப்பட்டது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்த புனிதப் பயணத்திற்காக இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 3,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், சவூதி ஏர்லைன்ஸ் விமானத்துடன் கூடுதலாக, கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலமாகவும் அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.