New Updates! Fresh news just arrived.

யாழில் காணாமல் போன மீனவர்கள்: கடற்படையினர் நடவடிக்கை எடுக...

News

யாழில் காணாமல் போன மீனவர்கள்: கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவுகள் குற்றச்சாட்டு!

March 4, 2026 12:01 pm
யாழில் காணாமல் போன மீனவர்கள்: கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவுகள் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கராசா அமல்ராஜ் (வயது 44), செல்வராசா ராஜ்குமார் (வயது 30) என்ற இரண்டு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து அந்த மீனவர்களது உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் கடலில் இரண்டு நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கரையை வந்தடைந்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றுவரை திரும்பி வரவில்லை.

அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (03) இந்திய மீனவர்கள் கடலில் கண்டதாகவும், அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தாகவும் கூறினர். இந்திய எல்லையில் நின்றால் இந்திய கடற்படையினர் கைது செய்து விடுவார்கள் என்றும், ஆகையால் கரையோரமாக செல்வதாகவும் அவர்கள் தங்களுக்கு கூறிவிட்டு சென்றதாக இந்திய மீனவர்கள் தெரிவித்தனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now