முல்லைத்தீவு கொக்கிளாயில் ஹெரோயினுடன் ஐவர் கைது!
News

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கொக்கிளாய் வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த நபர்களை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களும் தற்போது கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.