ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: பிள்ளையானுக்கு மீண்ட...
News
ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம்: பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருக்கும் பிள்ளையான் என்னும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இணையவழி தொழிநுட்பத்தினூடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து நபர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட இரு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.