கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு! ...
News
கஞ்சிகுடியாறு பகுதியில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!
துருப்பிடித்த நிலையில் 5 மோட்டார் குண்டுகள் புதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் குறித்த ஐந்து மோட்டார் குண்டுகளும் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவை கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளினுடைய கட்டுப்பாட்டுப்பகுதியாக காணப்பட்டதோடு, அங்கிருந்து இராணுவ முகாம்களினை நோக்கி மோட்டார் செல் குண்டுகள் ஏவப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தற்போது மீட்க்கப்பட்டுள்ள குண்டுகள் குறித்து திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டுள்ளதோடு, மீட்கப்பட்ட குண்டுகளினை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்