முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவர் மீண்...
News
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவர் மீண்டும் விளக்கமறியல்!
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களினையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கானது இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சந்தேக நபர்களினை எதிர்வரும் 13 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்த நிலையில், 'சதொச' நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றினை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களினை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.