New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் வி...

News

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

March 20, 2026 3:43 pm
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மூத்த புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோ, இளைய புதல்வர் ஜெரம் பெர்னாண்டோ மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now