திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைக...
News
திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்
திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை, இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று 01 ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
இதில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களிலேயே யாழ்ப்பாணத்தை வந்தடையலாம்.
வாரத்தில செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவைகள் இயக்கப்பட இருக்கின்றன.
நேற்று யாழ்பாணத்திலிருந்து திருச்சி வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.