மகாவலி தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - Gu...
News
மகாவலி தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மகாவலி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல் மகாவலி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மகாவலி கங்கையைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்தப் பகுதிகளின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மகாவலி கங்கைக்கு அருகில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெள்ள நிலைமை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.