சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்க...
News
சிறைச்சாலை கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் கவனம்!
சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினுடைய தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்படி, குறித்த சம்பந்தப்பட்ட அமைச்சுகளினுடைய அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில், குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அவர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை வசதிகளினை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய மாற்று நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரான ஆனந்த விஜேபால மற்றும் பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சினுடைய செயலாளர் அயேஷா ஜினசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.