New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்...

News

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரும் மனு விசாரணைக்கு

July 2, 2026 8:22 pm
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரும் மனு விசாரணைக்கு
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வருகின்ற ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'அபினவ நிவஹல் பெரமுன'வினுடைய தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு, இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களினை முன்வைத்து இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக மிக அருகாமையிலான திகதி ஒன்றை வழங்குமாறு கோரினார்.

எதிர்மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்னவும் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இவ் மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்தார் என்றும் அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய அரசாங்க ஊழியர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படுவது சட்டத்திற்கு முரணானதோடு, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகைமையீனமாகும் எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now