மக்கள் ஆட்சிக்கு - மக்கள் பலம்: திசைகாட்டியின் நுவரெலியா...
News
மக்கள் ஆட்சிக்கு - மக்கள் பலம்: திசைகாட்டியின் நுவரெலியாவில் மே தினக் கூட்டம்!
நுவரெலியாவில் மலையக மக்களின் மே தினக் கொண்டாட்டங்கள் பெருமையுடன் தொடங்கியது .
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மலையக மக்களுக்கான மே தின அணிவகுப்பு மற்றும் பேரணி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் (01) நுவரெலியாவில் தொடங்கி வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் கட்சியின் நுவரெலியா மாவட்ட மே தின அணிவகுப்பு, நுவரெலியா ஹவ எலியா பகுதியில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு அருகில் தொடங்கி நுவரெலியாவின் கிரிகரி வாவி பகுதியில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் வாகன நிறுத்துமிடத்தில் பிரதான மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் முடிவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த பல நாடாளுமன்ற , உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
வி.தீபன்ராஜ்