New Updates! Fresh news just arrived.

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவ...

News

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

October 3, 2026 4:06 pm
மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதல் முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

தனது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்தோடு, நோயாளியின் குடும்பத்தினர் இந்த உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர்.

இது போன்ற மகத்தான முடிவு பல உயிர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் அத்தோடு வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாகச் சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு வாழ்வளிக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, நேற்று (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

"உடல் உறுப்பு கொடை என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான ஒரு தானமாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும்" என வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மனிதநேயச் செயலுக்குச் சம்மதித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலையின் பணிப்பாளர் என்ற ரீதியில் அவர் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now