டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் க...
News
டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்!
நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதன்படி, உரையாற்றிய அவர், டெங்கு நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அம்பாரை மாவட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்போடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் காரியாலயம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் உலமா சபை, பொது அமைப்புகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைவரும் தொடர்ந்தும் ஒற்றுமையோடு, செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களினுடைய வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸ் அண்மையில் கல்முனையில் விழிப்புணர்வுக் கூட்டமொன்றினை நடத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்கப்பட்டு அனைவரினதும் ஒத்துழைப்போடு, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணம் முழுவதும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளினை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு, குறிப்பாக நிந்தவூர் பிரதேச செயலகத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்போடு, செயற்பட்டு வரும் அனைத்து திணைக்களத் தலைவர்களுக்கும் மக்கள் சார்பில் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலப்பை தெரிவித்தார்.
கே ஹமிட்