New Updates! Fresh news just arrived.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் -...

News

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்

July 17, 2026 9:08 am
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்
துப்பாக்கிச் சூட்டு காயத்தோடு, அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் தமக்கு தாமே துப்பாக்கிச் சூட்டினை ஏற்படுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டிருந்த சி.டி.விக்ரமரத்ன், 34 வருடத்திற்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியினை வகித்து வந்ததோடு பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளினை பொறுப்பேற்றிருந்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியோடு, அவர் தமது கடமைகளிலிருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now