லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை! - Gur...
News
லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை!
லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவினை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தினால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களினால் கொல்லப்பட்ட நிலையில் லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களினை செய்ததாக கடாபியினுடைய 2வது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றமனது மரண தண்டனை விதித்தது.
இருந்தபோதிலும், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என 2021ம் ஆண்டு அறிவித்த போதிலும் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையடுத்து, லிபியாவினுடைய சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டிற்குள் நேற்று மதியம் 2 மணியளவில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்த நிலையில், வீட்டிற்குள் இருந்த சைப் அல் இஸ்லாமை துப்பாக்கியினால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.