முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினுடையது என சந்தேகிக்கப்ப...
News
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினுடையது என சந்தேகிக்கப்படும் வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
உரிமையாளர் எவருமற்ற சொத்து என சந்தேகிக்கப்படும் மல்வானையில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (14) குறித்த வீட்டினை சுற்றிவளைத்து போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய மக்களிடம் இருந்து திருடப்பட்ட சொத்துக்களினை மீண்டும் மக்களிடமே ஒப்படைப்போம் என்கின்ற வாக்குறுதியை நினைவூட்டி மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடவசதி குறைவாகவுள்ள பல்கலைக்கழகங்களின் பயன்பாட்டிற்கும், பொதுமக்களினுடைய தேவைக்கும் குறித்த சொத்தைப் பயன்படுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்படி, சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் குறித்த வீட்டிற்குத்தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமது சட்டத்தரணிகலினூடாக நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த சொத்து நீதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த காணியையும் வீட்டினையும் ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 'அரகலய' போராட்டக் காலத்தில் ஒரு குழுவால் குறித்த வீடு தீ வைக்கப்பட்டதோடு, இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தது.
ஆரம்பத்தில் இங்கு சர்வதேச நீதிபதிகள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தினை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையிலும், நீண்ட காலமாக குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழலிலேயே, உரிமையாளர் இல்லாத குறித்த சொத்தை மாணவர்களின் கல்வி மற்றும் பொது நலச் சேவைகளுக்காக வழங்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளார்.