முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
News
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை அதிகாரிகளினால் விடுக்கப்பட்டத அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவி கருணாநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்படி, பல மணிநேர தீவிர விசாரணைக்குப் பின்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ஐவரை ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்பு அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.