New Updates! Fresh news just arrived.

துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை...

News

துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை!

June 27, 2026 6:49 pm
துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை!
பொலிஸாரினுடைய கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்த சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளினை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை (25) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 கிடைக்கப்பெற்றிருந்த முறைப்பாட்டிற்கமைவாக குறித்த சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலிருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் அவ் இடத்திற்கு சென்று விசாரணைகளினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதான சந்தேக நபர் பொலிஸாரினை அச்சுறுத்தி அவர்களினை காயப்படுத்தியதோடு, துப்பாக்கியையும் கடமை நேரத்தில் பறிக்க முற்பட்டிருந்தார்.இதன் போது குறித்த இடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சந்தேக நபர் பறிக்கப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டதோடு, காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, தலைமறைவான குறித்த சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆரம்ப கட்ட விசாரணையின் போது 2000 ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் 2004 ஆண்டு குறித்த வமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாக அவ்வமைப்பிலிருந்து விலகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவ தினத்தின் போது குடிபோதையிலிருந்த சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அதை லோட் செய்து துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பாடம் எடுத்ததோடு, உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள் எனவும் ஏளனத்தோடு, பொலிஸாரை வினவியதாக விசாரணையில் கூறியதாகவும் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் கைதான சந்தேக குறித்த நபர் 44 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளவர் என்பதுடன் சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now