'அர்னாப்' சூறாவளியில் சிக்கி காணாமல்போயிருந்த ந...
News
'அர்னாப்' சூறாவளியில் சிக்கி காணாமல்போயிருந்த நான்கு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு!
அண்மையில் நாட்டைப் பாதிப்புக்குள்ளாக்கிய அர்னாப்' சூறாவளி காரணமாக கடலில் தொடர்பாடல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, காணாமல்போயிருந்த "IMUL-A-0022 TLE" என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட மீன்பிடிப் படகும் அதில் பயணித்த நான்கு மீனவர்களும் இன்று பொத்துவில் கரையில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு நாள் மீன்பிடிப் பயணத்தை நோக்கமாகக் கொண்டு கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி குடாவெல்லை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்தப் படகில் டபிள்யூ.பி.பிரியந்த, பி.பி.நிமல்சிரி, எல்.வை.நௌஷ்க மற்றும் படகின் உரிமையாளரான கே.எச்.சவிந்து ஆகியோர் பயணித்துள்ளனர்.
அர்னப் சூறாவளி காரணமாக ஏற்பட்ட காற்று மற்றும் சீற்றமான கடல் நிலைமைக்கு திடீரென முகங்கொடுத்ததால், படகுக்கும் தரைக்குமான அனைத்து தொடர்பாடல் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
படகு பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாதுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சின் முழுமையான தலையீட்டின் பேரில் இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்படை மற்றும் அப்பகுதியில் பயணித்த ஏனைய மீன்பிடிப் படகுகளை ஒருங்கிணைத்து விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அந்த கூட்டு நடவடிக்கையின் பலனாக, இன்று பொத்துவிலில் இருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் குறித்த படகைக் கண்டுபிடிக்க முடிந்ததுடன், தற்போது படகில் இருந்த அனைத்து மீனவர்களையும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதுடன், தேவையான அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மற்றும் முதலுதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக்குவதற்காக விரைந்து செயற்பட்ட இலங்கை கடற்படைக்கும், கரையோர பாதுகாப்பு படைக்கும், அதற்கு அளப்பரிய ஆதரவை வழங்கிய மீனவ சமூகத்திற்கும் அமைச்சின் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் இத்தகைய திடீர் சூறாவளி நிலைமைகள் காரணமாக கடலின் தன்மை உடனடியாக மாறக்கூடும் என்பதால், எதிர்காலத்தில் கடலுக்குச் செல்லும் அனைத்து மீனவர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் வெளியிடப்படும் நாளாந்த வானிலை முன் அறிவிப்புகள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும், கடலுக்குச் செல்வதற்கு முன் தொடர்பாடல் சாதனங்களின் செயல்பாட்டை சரியாக உறுதிப்படுத்துமாறும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு வலியுறுத்த்தியுள்ளது.