New Updates! Fresh news just arrived.

கொள்ளை சம்பவ வழக்கில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது - G...

News

கொள்ளை சம்பவ வழக்கில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது

August 7, 2026 8:20 am
கொள்ளை சம்பவ வழக்கில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது
கல்கிசை பகுதியில் இடம்பெற்ற பாரிய நகைக் கொள்ளை தொடர்பாக நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குகின்றனர்.

கடந்த ஜூலை 18ஆம் திகதி வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள், சுமார் ஒரு கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (06) தெஹிவளை பகுதியில் வைத்து இரண்டு பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கொள்ளைச் சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பெண்ணும் ஆணும் ஹட்டன் பத்தனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 8 ஜோடி காதணிகள், 4 தங்கப் பதக்கங்கள், ஒரு வளையல், 10 தங்கச் சங்கிலிகள், ஒரு கைக்காப்பு மற்றும் 2 தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்கள் 28, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேகநபர் 28 வயதுடைய ஹட்டன் பத்தனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now