New Updates! Fresh news just arrived.

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனின் வீட்டிற்...

News

புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனின் வீட்டிற்கு இலவச மின்சாரம்

October 2, 2026 3:19 pm
புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனின் வீட்டிற்கு இலவச மின்சாரம்
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 01 தமிழ் வித்யாலயத்தில், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் 141 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்த பஸ்டியன் கௌசிக் எனும் மாணவனின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்டத்தின் பொது முகாமையாளர் சுகத் விஜயரத்ன, குறித்த மாணவனின் வீட்டிற்குக் கள விஜயம் மேற்கொண்டு, தனது சொந்த நிதிப் பங்களிப்பில் அந்த குடும்பத்திற்கான மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இந்நிகழ்வு இன்று (02) உத்தியோகபூர்வமாக நடைபெற்றதுடன், மின்சார விநியோகத்தினைத் தோட்டப் பொது முகாமையாளர் முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 01 தமிழ் வித்யாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தோட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த மாணவன் இதுவரை காலமும் தனது வீட்டில் மின்சார வசதி இல்லாததால், மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலேயே தனது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவனுக்கு இந்த உதவியைச் செய்து கொடுத்த தோட்டப் பொது முகாமையாளருக்கு, மாணவனின் குடும்பத்தினர் சார்பாகவும் பாடசாலைச் சமூகம் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now