மக்களுக்கு விரைவில் எரிபொருள் சலுகை? அமைச்சர் பிமல் முக்க...
News
மக்களுக்கு விரைவில் எரிபொருள் சலுகை? அமைச்சர் பிமல் முக்கிய அறிவிப்பு
உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடித்தால், எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மக்களுக்கு எரிபொருள் விலை சலுகை வழங்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாவும், ஒரு லீற்றர் பெற்றோலுக்கு சுமார் 20 ரூபாவும் மானியமாக அரசாங்கம் வழங்கி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொள்வனவு என்பது சாதாரண சந்தையில் பொருட்களை வாங்குவது போன்றதல்ல என்றும், முன்கூட்டியே டெண்டர் கோரப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட விலைகளின் அடிப்படையிலேயே இறக்குமதி செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள் கையிருப்புகள் ஏற்கனவே அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டவையென சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், உலக சந்தையில் தற்போதைய விலை நிலை தொடர்ந்தால், அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்கும் வகையில் ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் எரிபொருள் விலையில் சலுகை வழங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இணைந்தே மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், எரிபொருள் விலையைக் குறைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் போது அதனை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு தாமும் கோரியுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.