எரிபொருள் நெருக்கடி; களமிறங்கும் விசேட அதிகாரிகள் - அரசாங...
News
எரிபொருள் நெருக்கடி; களமிறங்கும் விசேட அதிகாரிகள் - அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைக் கண்காணிக்கும் குழுவிற்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27.03.2026) நடைபெற்றிருந்தது.
இதன்போது எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சுகளின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள 5 அதிகாரிகளும் ஒவ்வொரு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கண்டறிந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து உடனடித் தீர்வுகளை வழங்குவர்.
கைத்தொழிலாளர்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிப்பதற்காக வாகனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கோரிக்கைகளை நிராகரித்தால் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு நடந்தால் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சதொச, மொத்த இறக்குமதியாளர்கள், சுற்றுலாத்துறை மற்றும் உணவகங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டு கோரிக்கைகளை அந்தந்த அமைச்சுகள் ஊடாக விரைவாகச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு அரச அதிகாரிகளின் பரிந்துரைக் கடிதங்களுக்குப் பதிலாக, QR குறியீட்டு முறையை விரைவாகச் செயல்படுத்துவது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்குவதையும், பொருட்களின் விலை அதிகளவில் உயர்வதைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு, எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் முறையான முகாமைத்துவத்துடன் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு வலியுறுத்தினார்.