எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு - Gur...
News
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், அதற்கேற்ப உள்நாட்டில் எரிபொருள் விலைகளை உடனடியாகக் குறைப்பதற்கு சாத்தியமில்லை என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தற்போது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருவது கடந்த மாதங்களில் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகளாகும் என குறிப்பிட்டார்.
அந்த கையிருப்புகள் முழுமையாக நுகரப்பட்ட பின்னரே புதிய விலை நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டு எரிபொருள் விலை தொடர்பில் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்படும் எரிபொருள் நாட்டை வந்தடைந்த பின்னர், தற்போதைய சலுகை விலைகளைத் தொடர்வதா அல்லது மேலும் விலைக் குறைப்பை வழங்குவதா என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள சாதகமான மாற்றங்கள் தொடர்ந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் நன்மை கிடைக்கும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.