New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு - Gur...

News

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

March 25, 2026 9:42 am
எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தங்கள் அனைத்தும் முறையான விலை சூத்திரத்திற்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் இறக்குமதி செலவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய செலவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த விலை திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

இதில் விசேட சூத்திரங்கள் எதுவும் இல்லை.

முழுக்க முழுக்க உண்மையான செலவுகளே கணக்கில் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இறக்குமதி செலவுகளைக் கணக்கிட்டு அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கிறது.

எனினும் இறுதி விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது.

சில சந்தர்ப்பங்களில் சுமையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் போது, விலை சூத்திரத்தில் காட்டப்படும் விலையை விடக் குறைவான விலையில் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்படலாம்.

ஆனால் கூட்டுத்தாபனம் தனது கணக்கீடுகளைத் துல்லியமாகவே வழங்குகிறது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்படும் சடுதியான மாற்றங்கள் காரணமாக, முன்னரைப் போல மாதத்திற்கு ஒருமுறை என்றில்லாமல், தற்போது அடிக்கடி விலைக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனாலும் அடிப்படை விலை சூத்திரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

மேற்கண்ட விடயங்களை விளக்கிய அவர், தற்போதைய விலை மாற்றங்கள் உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்பவே முன்னெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now