New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விலைத் திருத்தம் இன்று: வலுசக்தி அமைச்சர்! - Gu...

News

எரிபொருள் விலைத் திருத்தம் இன்று: வலுசக்தி அமைச்சர்!

September 30, 2026 1:08 pm
எரிபொருள் விலைத் திருத்தம் இன்று: வலுசக்தி அமைச்சர்!
ஒக்டோபர் மாதத்திற்குரிய எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளது.

இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக கருத்துத் தெரிவிக்கையில், வழக்கமாக மாதத்தின் கடைசி நாளிலேயே எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும் எனக் குறிப்பிட்டார்.

விலை திருத்தத்தின் போது டீசல் லீட்டர் ஒன்றுக்கு 70 ரூபாய் மானியத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் தமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சில நிறுவனங்கள் டீசலுக்கு 120 ரூபாய், 135 ரூபாய், 192 ரூபாய் மற்றும் 247 ரூபாய் என்ற வகையில் நஷ்டத்தைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எரிபொருள் மானியத்தை வழங்குவதன் மூலம் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் பாரிய சுமையை எதிர்கொள்வதாகவும், வருட இறுதியில் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படாது என்றும் கூறினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now