New Updates! Fresh news just arrived.

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு - சற்றுமுன் வெளியானது வ...

News

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு - சற்றுமுன் வெளியானது விசேட அறிவித்தல்

March 9, 2026 11:04 pm
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு - சற்றுமுன் வெளியானது விசேட அறிவித்தல்
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 195 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now