New Updates! Fresh news just arrived.

எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு

News

எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு

May 27, 2026 11:58 am
எரிபொருள் மானியம் குறித்து வெளியான அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களுடன் தொடர்புடைய நெருக்கடிகள் தணியும் வரை, தற்போதைய எரிபொருள் மானிய நடைமுறையை நிறுத்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தில் ஏற்படும் நட்டத்தை அரசாங்கத்தால் காலவரையறையின்றி பொறுப்பேற்க முடியாது என அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மின்சக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்கவிடம் வினவியபோது, ஜனாதிபதி கூறியது மானியத்தைக் காலவரையறையின்றி தொடர முடியாது என்பதைத் தான் என்றும், தற்போதைய நெருக்கடி நிலை தணிந்த பின்னரே இந்த மானியம் நீக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொதுமக்களின் பொருளாதார சுமையைக் குறைப்பதற்காக, தற்போதைய மானிய ஏற்பாட்டின் கீழ் அரசாங்கம் ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயையும், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 20 ரூபாயையும் பொறுப்பேற்று வருகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now