New Updates! Fresh news just arrived.

ஈரானுக்கு முழுமையான ஆதரவு: சீனா பகிரங்க அறிவிப்பு!

News

ஈரானுக்கு முழுமையான ஆதரவு: சீனா பகிரங்க அறிவிப்பு!

March 2, 2026 7:58 pm
ஈரானுக்கு முழுமையான ஆதரவு: சீனா பகிரங்க அறிவிப்பு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உச்சமடைந்திருக்கும் சூழலில், ஈரானினுடைய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதில் தாங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

ஈரானிய வெளிவிவகார அமைச்சருடனான உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் போது, சீன வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்திருப்பதாக சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண நிலைமைகளுக்கு மத்தியில் ஈரானினுடைய உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளினை நிராகரிப்பதாகவும், ஈரானின் தேசிய நலன்களினைப் பாதுகாப்பதில் இராஜதந்திர ரீதியில் சீனா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறித்த பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஈரானோடு நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ள சீனா, தற்போதைய நெருக்கடியான கட்டத்தில் ஈரானுக்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்திருப்பதானது, சர்வதேச மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாகப் பார்க்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now