New Updates! Fresh news just arrived.

ஆசிரிய இடமாற்றத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்ட விவகாரம்: ம...

News

ஆசிரிய இடமாற்றத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்ட விவகாரம்: மூவரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

April 25, 2026 9:28 pm
ஆசிரிய இடமாற்றத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்ட விவகாரம்: மூவரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவையின் தேவை கருதிய இடமாற்ற விவகாரத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்ட விவகாரம் தொடர்பில் வட மாகாண உயர் அதிகாரிகள் மூவரை எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோருக்கு இவ்வாறு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது பெயரிடப்பட்ட எதிர்வாதி/எதிர்வாதிகளுக்கு எதிராக, இலங்கை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை/உரிமைகள் மீறப்பட்டதாகச் செய்யப்பட்டுள்ள புகார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் 7வது மாடியில் உள்ள அறை எண் 05-ல், 2026 ஏப்ரல் 28 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு விசாரிக்கப்படும்.

அதற்கமைய, தொடர்புடைய ஆவணங்களுடன் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு உங்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் எண் 21 இன் பிரிவு 20(3) படி, ‘அழைப்பாணை வழங்கப்படும் ஒவ்வொருவரும் அதில் குறிப்பிடப்பட்ட நேரத்திலும் இடத்திலும் ஆணைக்குழுவின் முன் ஆஜராக வேண்டும்.

ஆணைக்குழுவால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் அல்லது அழைப்பாணையின் பொருளடக்கத்தின்படி, அவரிடமோ அவரின் கட்டுப்பாட்டிலோ உள்ளதாகவும், அவரிடமிருந்து கோரப்பட்டதாகவும் இருக்கும் ஆவணங்கள் அல்லது பிற பொருட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் எண் 21 இன் பிரிவு 18 கீழ் விசாரணைகள் நடத்துவதற்கான அதிகாரங்களைப் பயன்படுத்தும் சூழலில், பிரிவு 20(2) கீழ் அழைப்பாணை வழங்கப்பட்டபோது, பிரிவு 21(3) இன் படி, ஏற்றுக்கொள்ளத்தக்க காரணமின்றி ஆணைக்குழு குறிப்பிட்ட நேரத்திலும் இடத்திலும் ஆஜராகத் தவறுவது .

அல்லது மறுப்பது, ஆணைக்குழுவால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காதது, ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அறிவிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான ஆணை அல்லது உத்தரவைப் பின்பற்றாதது .

அல்லது அவரிடமோ அவரின் கட்டுப்பாட்டிலோ உள்ளதாகவும் அவரிடமிருந்து கோரப்பட்டதாகவும் இருக்கும் ஆவணங்கள் அல்லது பிற பொருட்களை சமர்ப்பித்து காட்டாதது ஆகியவை, ஆணைக்குழுவின் அதிகாரத்துக்கு எதிரான அவமதிப்பு அல்லது மரியாதையின்மை குற்றமாகக் கருதப்படும்.

இத்தகைய அவமதிப்பு குற்றம், இலங்கை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு எதிரான அவமதிப்பு குற்றமாகவே கருதப்பட்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 21 படி தண்டிக்கப்படலாம் என தெரிவித்து அழைப்பு கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now